ரூ5.999/- முதல் ரூ.9.999/-க்குள் 3 சூப்பர் பட்ஜெட் கருவிகளுடன் கலக்கும் கோமியோ.!

in #mobiles7 years ago

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய நுழைவான கோமியோ நிறுவனம் அதன் கொமியோ எஸ்1, பி1 மற்றும் சி1 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. கோமியோ பி1 ஆனது ரூ9,999/- என்ற விலை நிர்ணயம் பெற, எஸ்1 மற்றும் சி1 ஆனது முறையே ரூ.8,999/- மற்றும் ரூ 5,999/- என்ற விலை கொண்டுள்ளது. EXPAND மேலும் ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டணி கொண்டு ரூ.309/- அல்லது அதற்கும் மேலாக ரீசார்ஜ் செய்யயும் பயனர்களுக்கு கூடுதல் 5ஜிபி தரவும வழங்கப்படுகிறது. உடன் கோமியோ நிறுவனம் சில சுவாரஸ்யமான பிந்தைய விற்பனை சேவைகளையும் வழங்கி வருகிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! கூடுதல் உற்பத்தியாளர் உத்தரவாதம் எடுத்துக்காட்டுக்கு பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் மேம்படுத்த அனுமதிக்கும். மூன்று ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரு வருடத்திற்கு +100 நாட்கள கூடுதல் உற்பத்தியாளர் உத்தரவாதம் கிடைக்கும், ஆறு மாதங்களுக்கு பின்னர் ஒருமுறை இலவச திரை மாற்று உத்தரவாதமும் வழங்குகிறது. 32 ஜிபி உள் சேமிப்பு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை பொறுத்தமட்டில், கொமியோ எஸ்1 மற்றும் கோமியோ பி1 ஆனது நிறுவனத்தின் தலைமை சாதனங்கள் ஆகும். அதே நேரத்தில் கோமியோ சி1 ஆனது ஹைஃபை இசைடன் வருகிறது. அனைத்து ஸ்மார்ட்போன்களுமே 64 பிட் மீடியா டெக் செயலிகளுடன் 32 ஜிபி உள் சேமிப்புடன் இயங்கும் மற்றும் 4ஜி வோல்ட்-ஐஆதரிக்கின்றன. Ads by ZINC 5.2 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே எஸ்1 ஆனது வளைந்த முனைகளை கொண்ட ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பில் வருகிறது மற்றும் ஒரு 5.2 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே, 2 ஜிபி ரேம், ஒரு 2700எம்ஏஎச் பேட்டரி மற்றும் முன் எதிர்கொள்ளும் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. கேமராத்துறையில், ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. ராயல் பிளாக் மற்றும் சன்ரைஸ் கோல்ட் ஆகிய நிற வகைகளில் இந்த போன் கிடைக்கும். 5000எம்ஏஎச் பேட்டரி கோமியோ பி1 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 5000எம்ஏஎச் பேட்டரி திகழ்கிறது. இது 24 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 30-நாள் காத்திருப்பு நேரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக நிறுவனம் கூறுகிறது. 13 மெகாபிக்சல் பின்புற கேமரா 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 3ஜிபி ரேம் மற்றும் ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் முன்பக்ககம் எதிர்கொள்ளும் கேமரா, கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இக்கருவி மெட்டல் ஏஷ் மற்றும் சன்ரைஸ் கோல்ட் நிற வகைகளில் கிடைக்கும். ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு இறுதியாக, கோமியோ சி1 ஆனது ஒரு ஹைஃபை ம்யூஸிக் மற்றும் ஒரு ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகிய அம்சங்களை கொண்டுள்ள இந்த சாதனம் மெலோ கோல்ட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும். சில்லறை கடைகளில் வட இந்தியாவில் வரும் வாரம் முதல் அனைத்து முக்கிய சில்லறை கடைகளில் கிடைக்கும் இந்த சாதனங்கள் அனைத்தும், செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து மேற்கு இந்தியாவிலும் கிடைக்கும்.

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://tamil.gizbot.com/mobile/comio-makes-its-indian-debut-launches-three-smartphones-015024.html

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62014.91
ETH 2410.27
USDT 1.00
SBD 2.50